சிவாஜி சிறகுகள்
இறகுகளின் தொகுப்பு
Monday, October 25, 2010
மக்கா என்னும் மந்திரச்சொல்..!
"மாப்ள மகா கல்யாணத்துக்கு வந்துரு மக்கா.,
முந்துன நாள் நைட்டே வந்துரு. தங்கதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்கேன். ஒத்தையா இருந்து அலையதுக்கு முடியல மாப்ள, கொஞ்சபெரதான் கூப்ட்டுருக்கேன் கண்டிப்பா வந்துரு மக்கா..." காற்றலையில் பா.ரா வின் குரல் மாமாவின் குரல்..
நீண்ட இரவுப்பயணம் இமை மூடித்திறக்க முடிந்து கொண்டது.. வாஞ்சி நகர் கடந்து சிவகங்கை., பரபரப்பான சிவகங்கை சீமையில் பிரிந்துசென்ற சாலையோரத்தில் தேனடைக்குள் குழுமி இருந்த தேனீ கூட்டம் வரவேற்றது..
கொடுக்கில் அன்பூட்டப் பெற்ற பின் எனக்கும்
முளைத்து றெக்கை..
ராஜசுந்தர்ராஜன் ஐயா, பொன் .வாசுதேவன் சார், மணிஜி, சரவணன் அண்ணா, கும்க்கி அண்ணா, ஜெர்ரீ ஈசானந்த் அண்ணா, அக்பர் அண்ணா, இவர்களோடு நானும்., நல விசாரிப்புகள், நட்பு உரையாடல் இல்லம் வரும் வரை..
வண்டியிலிருந்து இறங்கியதும் பற்றிக்கொண்டது பா.ராவின் கரம் மாமாவின் கரம்.. என் உள்ளங்கையில் பம்பரம் சுழளுவதாய் கன்னம் குறுகுறுத்தது..!
"வா மாப்ள எப்டி வந்த.? ப்ரயாணம் செளரியமா இருந்தா..? உள்ள போய் இரி மாப்ள.." வந்தவர்களை எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்த மாமாவின் கால்கள் ஓட்டமும் நடையுமாக இருந்தது..
கடலோரம் கிளிஞ்சல்கள் தேடும் சிறுவராக வரும் ஒவ்வோர் முகத்தையும் தேடிக்கொண்டிருந்தது மாமாவின் கண்கள்.
அன்பு தடவிய வார்த்தைகள் அழகிய வாசிப்பு அனுபவமாக ராஜசுந்தர்ராஜன் ஐயாவுடன் தொடர்ந்து தோழர் மாதவராஜ், காமராஜ் மற்றும் பத்மா அக்கா வருகை..
அன்பால் நிறைந்திருந்தது அரங்கம்.
மக்கா என்னும் மந்திரச்சொல் வசியப்படுத்திய அத்தனை நெஞ்சங்களின் ஆசிகளோடு
"பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி.,
பார்வையிலே மன்னன் பேர் எழுதி.,
அதை பார்த்திருக்கும் கண்கள் நீர் எழுதி.."
பாடல் ஒலித்து முடிந்தது..
அன்பு, அரட்டை, குழுப்படம், நீராகாரம், விருந்து என நகர்ந்து கொண்டிருந்தது நேரம். ராஜசுந்தர்ராஜன் ஐயா, பொன் .வாசுதேவன் சார் உரையாடல்., பேச்சின் ஆழங்களை அறியாமலேயே பிரமிப்பாகவும் ஆர்வமாகவும் சிரிப்புடனும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
சிறுகச் சிறுக ஒளியின் நீளம் குறைந்து முழுவதுமாக இல்லாமல் போகும் நேரம் முன் மஹாவிடம் விடைபெற்று அறை சேர்ந்தோம்.
இரவு ஊட்டம், நண்பர்களின் புறப்பாடு., மாமாவின் மைத்துனர் முத்துராமலிங்கத்தின் அன்பில் அத்தனை ப்ரியங்களுக்கும் ப்ரியா விடை..
"பேருந்தேறும்வரை உடனிருந்தார் மாமா..
"மாப்ள., பாத்து போடா., போயி சேந்ததும் கால் பண்ணுடா."
நின்றிருந்த பேருந்து நகர்ந்தது.. நானும்...
ஐ லவ் யூ மாமா... ஐ மிஸ் யூ டூ..
Labels:
பதிவுலகம்.
Subscribe to:
Posts (Atom)
